கூட்டுக் குடும்பம்

என்றோ சண்டைபோட்டுப்போன சித்தப்பா, கல்யாணமாகி அமெரிக்கா சென்றுவிட்ட அத்தை, புதிதாய் கல்யாணமான அண்ணன், அண்ணி, பக்கத்து வீட்டு ஜிம்மி என்று கூடியிருந்தது தாத்தாவின் பெருங்குடும்பம். ஆனால் பாட்டிக்கு மட்டும் இடமில்லை. அவளிடம் தான் வாட்ஸ்அப் இல்லையே, தாத்தாவின் பெயர்கொண்ட குரூப்பில் சேர!

Advertisements

தரம்

புதிதாய் ரோடு போட்டு முடித்த காண்ட்ராக்டர், சீரமைப்புக்கான டெண்டர் விடப்படவேண்டிய தேதியை சோதனை அதிகாரியிடம் அறிவித்தார், ஒரு ‘சீலி’ட்ட கவரோடு.