தரம்

புதிதாய் ரோடு போட்டு முடித்த காண்ட்ராக்டர், சீரமைப்புக்கான டெண்டர் விடப்படவேண்டிய தேதியை சோதனை அதிகாரியிடம் அறிவித்தார், ஒரு ‘சீலி’ட்ட கவரோடு.
Advertisements

சிக்கனம்

அறிஞர்களும் அதிகாரிகளும் பங்கேற்ற ‘மின்சார சேமிப்பு வழிமுறைகள்’ பற்றிய கூட்டம் முடிந்து.  2 மணி நேரத்திற்கு பிறகு அந்த அரங்கத்தைப் பெருக்க வந்த வள்ளி ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிகளையும், விளக்குகளையும் அணைத்தாள்.