‘குடி’த்தனம்

10 நாட்களாய் வேலையில்லாமல் இருந்த பெயிண்டர் ஜோசப், காலையிலிருந்து மதுக்கடை சுவரில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதிக்கொண்டிருந்தான். அன்றிரவும் அவன் மனைவி வாசலில் காத்திருந்தாள். உளை கொதித்துக்கொண்டிருந்தது. தெரு முனையில் பெயிண்ட் பிரஷ், காலி பாடில்களுடன் மயங்கி கிடந்தான் ஜோசப்.
Advertisements

வியப்பு

DSC00306

“அப்பா., அப்பா… தாத்தா வீட்ல ஜுல(Zoo) இருக்கற அனிமல்ஸ் எல்லாம் இருக்கு!”., என்று தன் தாத்தா வீட்டின் கொல்லையில் இருந்த ஆடு மாடுகளை பார்த்து சொன்னான் முதன் முறை கிராமம் வந்த ஐந்து வயது வினய்!!