உன் கண் என்ன


உன் கண்கள் என்ன கருங்குவளை மலரா

இல்லை அதை சுற்றும் கருவண்டின் வடிவா –

காண்போர் தொலையும் கானகமா

இல்லை பாலையில் பூத்த பூவனமா –

மனம் மயக்கும் மலரினமா

இல்லை மதி மயக்கும் மது சுனையா –

கருனையின் உறைவிடமா

இல்லை காலங்களின் கல்லறையா –

கவிஞர் பாடா உவமையா

இல்லை தமிழும் காணா புதுமையா –

என் எண்ணங்களின் ஊற்றா

இல்லை என்னை பிடித்த சிறையா

A Child’s Babbling (மழலை)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர் – 66

Saint poet Thiruvalluvar says in his verse. I am not an exception 🙂 I love children and the babbling 🙂 Tons of sorrow disappear in a short babbling. I once drew a baby girl as a pencil sketch and a couplet for the babbling of a child.

இலக்கணங்கள் வகுக்கப்படா இலக்கியங்கள் –

குழந்தைகளின் மழலை

– சிவகுரு