அலை கடல்

கல்கி எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

எனக்காக எழுதினார் கல்கி

பொன்னியின் செல்வன் படித்த பலருக்கும் இந்த பாடல் தெரியும். கதையில் பல இடங்களில், சிறு சிறு பகுதிகளாக வந்தவை ஒன்றாக இங்கு தொகுக்கப்பட்டுள்ளது: 965145_624304687598066_1218550155_o

அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகம் தான் பதைப்பது மேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே!

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான் விழியாள் பெண்ணொருத்தி
மனதில் புயல் அடிப்பது மேன்?

வாரிதியும் அடங்கி நிற்க
மாருதமும் தவழ்ந்து வர
காரிகையாள் உளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதுமேன்?

அலை கடல் கொந்தளிக்கையிலே
அகக் கடல்தான் களிப்பது மேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சகந் தான் துள்ளுவதேன்!

இடி இடித்து எண் திசையும்
வெடி படும் இவ் வேளையிலே
நடனக் கலை வல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்? – அமரர் கல்கி

அமரர் கல்கி பாடல்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. பதிப்பகம்: வானதி விலை: ரூ.40

View original post

Advertisements

3 thoughts on “அலை கடல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s