வலைப்பதிவர் திருவிழா – 2015

கடந்த வாரம் ஞாயிறன்று (11 அக்டோபர் 2015) புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா 2015 நடைபெற்றது. தொலைநிலைக் கல்வி வகுப்புகள் காரணமாக அந்த விழாவில் கலந்துகொள்ளாத நான், பல நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை இழந்தது எண்ணி வருந்துகிறேன். விழாவின் செய்திச் சுருக்கத்தை வலைப்பதிவர் திருவிழாவுக்கான வலைப்பூவிலிருந்து பதிவிடுகிறேன்.

உலகத்தை இணைக்கும் இணையத்தமிழ் வளரவேண்டும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கணினித் தமிழ்ச்சங்கத்திற்கு பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா.

புதுக்கோட்டை  ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற “ நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா-2015“ நிகழ்விற்குத் தலைமையேற்று, உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்தவாறே தமிழில் வலைப்பக்கம் வைத்து எழுதிவருவோர் யார் எவர் எனும் விவரங்களைக் கொண்ட “உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு“ நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிய சொ.சுப்பையா  மேலும் பேசியதாவது

“தமிழ் தன்னை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டு வருகிறது. தமிழாகள் நாம்தான், தமிழ்வழியாக உலகத்தை இணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு, வளர்ந்துவரும் இணையத் தமிழைப் பயன்படுத்த கற்கவேண்டும். அதற்கான பயிற்சியை அனைவரும் –குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்- மேற்கொள்ள வேண்டும். இதுபோலும் பயிற்சியினைத் தமிழ்இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் துணைநிற்கும்“ என்றார்.

புதுக்கோட்டையில் பணியாற்றிய போது, கணினித் தமிழ்ச்சங்கத்தைப் புதுக்கோட்டையில் நிறுவியவரும், தற்போதையவிழவில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் விழாவில் தொடக்கவுரையாற்றினார்.

தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி இவ்விழாவை ஒட்டி உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட ஆறுவகையான போட்டிகளில் வெள்றிபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப் பரிசையும் வெற்றிக் கேடயங்களையும் வழங்கிப் பேசும்போது, இணையத் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு செய்துவரும்  பணிகளை,இணையத்தமிழ்ப் பயிற்சி, இணைய நூலக வளர்ச்சி, மின்னூலாக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சியோடு இணைந்த தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கணினி, சூழல், பெண்ணியம் தொடர்பான கட்டுரைப் போட்டிகளில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரிசுபெற்றதும், இதில் புதுக்கவிதைப் போட்டியில் புதுக்கோட்டைக் கவிஞர்கள் செல்வா முதற்பரிசும், வைகறை மூன்றாம் பரிசும் மரபுக் கவிதைப் போட்டியில் கவிஞர் மகா.சுந்தர் இரணடாம் பரிசும் பெற்றது குறிப்பிடத் தக்கது. மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

விக்கிமீடியாவின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருமான அ.இரவிசங்கர், கவிஞர் வைகறையின்“நநதலாலா” இணைய மாதஇதழை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய தகவல் களஞ்சியமான விக்கியில் ஆங்கிலத்திற்கு உள்ள வசதிகளைத் தமிழிலும் பெறவேண்டுமானால், நாம் இன்னும் கூடுதலான தகவல்களைத் திரட்டித்தர முன்வரவேண்டும். கட்டுரையில் தருவதைக் கவிதை, கதைகளில் தர முடியாது. தகவல் திரட்டும்போது அனைத்தும் தமிழில் கிடைப்பதை உறுதிப்படுத்தினால் தமிழ் தானே வளரும் ஆகவே, விக்கிபீடியா தளத்தில் அனைவரும் பங்களிக்கும் பயிற்சியைப் பெற முன்வரவேண்டும் என்றார்.

உலகத்தை இணைக்கும் இணையத்தமிழ் வளரவேண்டும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கணினித் தமிழ்ச்சங்கத்திற்கு பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா.

புதுக்கோட்டை  ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற “ நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா-2015“ நிகழ்விற்குத் தலைமையேற்று, உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்தவாறே தமிழில் வலைப்பக்கம் வைத்து எழுதிவருவோர் யார் எவர் எனும் விவரங்களைக் கொண்ட “உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு“ நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிய சொ.சுப்பையாமேலும் பேசியதாவது

“தமிழ் தன்னை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டு வருகிறது. தமிழாகள் நாம்தான், தமிழ்வழியாக உலகத்தை இணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு, வளர்ந்துவரும் இணையத் தமிழைப் பயன்படுத்த கற்கவேண்டும். அதற்கான பயிற்சியை அனைவரும் –குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்- மேற்கொள்ள வேண்டும். இதுபோலும் பயிற்சியினைத் தமிழ்இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் துணைநிற்கும்“ என்றார்.

புதுக்கோட்டையில் பணியாற்றிய போது, கணினித் தமிழ்ச்சங்கத்தைப் புதுக்கோட்டையில் நிறுவியவரும், தற்போதையவிழவில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் விழாவில் தொடக்கவுரையாற்றினார்.

தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி இவ்விழாவை ஒட்டி உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட ஆறுவகையான போட்டிகளில் வெள்றிபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப் பரிசையும் வெற்றிக் கேடயங்களையும் வழங்கிப் பேசும்போது, இணையத் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு செய்துவரும் பணிகளை,இணையத்தமிழ்ப் பயிற்சி, இணைய நூலக வளர்ச்சி, மின்னூலாக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சியோடு இணைந்த தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கணினி, சூழல், பெண்ணியம் தொடர்பான கட்டுரைப் போட்டிகளில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரிசுபெற்றதும், இதில் புதுக்கவிதைப் போட்டியில் புதுக்கோட்டைக் கவிஞர்கள் செல்வா முதற்பரிசும், வைகறை மூன்றாம் பரிசும் மரபுக் கவிதைப் போட்டியில் கவிஞர் மகா.சுந்தர் இரணடாம் பரிசும் பெற்றது குறிப்பிடத் தக்கது. மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

விக்கிமீடியாவின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருமான அ.இரவிசங்கர், கவிஞர் வைகறையின்“நநதலாலா”இணைய மாதஇதழை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவர்பேசும்போது, உலகளாவிய தகவல் களஞ்சியமான விக்கியில் ஆங்கிலத்திற்கு உள்ள வசதிகளைத் தமிழிலும் பெறவேண்டுமானால், நாம் இன்னும் கூடுதலான தகவல்களைத் திரட்டித்தர முன்வரவேண்டும். கட்டுரையில் தருவதைக் கவிதை, கதைகளில் தர முடியாது. தகவல் திரட்டும்போது அனைத்தும் தமிழில் கிடைப்பதை உறுதிப்படுத்தினால் தமிழ் தானே வளரும் ஆகவே, விக்கிபீடியா தளத்தில் அனைவரும் பங்களிக்கும் பயிற்சியைப் பெற முன்வரவேண்டும் என்றார்.

இந்த விழாவில், என் தந்தையார் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், தமிழ் விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவருவதற்காக கௌரவிக்கப்பட்டார்.

DSC_0368இவ்விழாவில் வெளியிடப்பட்ட வலைப்பதிவர் கையேடு 2015ல் இந்த வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.

invitation12108993_1144492125579317_4075916182127411613_nவிழா நிகழ்வுகளிலிருந்து சில புகைப்படங்கள் இதோ. . .

வலைப்பதிவர் திருவிழா 2015 காணொளிகள் இந்த இணைப்பில் உள்ளன.

மூலம்: http://bloggersmeet2015.blogspot.com/

Advertisements

2 thoughts on “வலைப்பதிவர் திருவிழா – 2015

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s