பரிவாதினி

மகேந்திரவர்ம பல்லவரின் ஆட்சிக்காலம். கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்தும் சிறப்புற்று விளங்கிய காலம். விந்திய மலைக்குகைகளில் புத்த பிஷுகளும் சமணர்களும் அற்புதமான சிற்பங்களையும், பல ஆண்டுகள் ஆனாலும்  என்றுமே புதிதுபோல வண்ணம் மங்காமல் ஒளிவீசும் ஓவியங்களையும் படைத்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அந்தப் பணியை மீண்டும் துவங்க சாளுக்கிய மன்னனான புலிகேசி பல நாடுகளிலிருந்தும் சிறந்த ஓவியர்களை விந்திய மலைக்கு கொண்டு வருகிறான். ஓவியர்கள் வந்தாலும், காலத்தால் மங்காத அந்த அற்புத வர்ணச்சேர்க்கையை ரகசியமாகவே காக்க வேண்டும் என்றும், அது என்றுமே தன் பகைவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறான். அந்த ரகசியம் எப்படி வெளியாகி இன்றும் சித்தன்னவாசலில் ஓவியமாக ஒளிவீசுகின்றது என்பதைப் பற்றிய கதையே பரிவாதினி.

அப்பணியை மேற்கொள்ள தமிழகத்திலிருந்து ஒரு முதிய ஓவியர் தன் மகளுடன் அஜந்தா வருகிறார். அவரிடம் ஓவியக்கலை கற்பதற்காக குணபரன் என்ற இளைஞனும் விந்திய மலைக்குகைகளுக்கு வருகிறான். பல ஆண்டுகளுக்கு முன்பு குடையப்பட்ட குகைகளில் புதிய ஓவியங்கள் தீட்டும் பணி நடக்கிறது. முதிய ஓவியருக்கு உதவும் நேரம் தவிர குணபரன் பிற குகைகளில் உள்ள ஓவியங்களையும், சிற்பங்களையும் கண்டு அதிசயிக்கிறான். அந்த வண்ணக் கலவையின் ரகசியம் அறிய இரவெல்லாம் விழித்திருந்து கண்காணிக்கின்றான். ஆனால் அவன் முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லை. ஏழு நரம்புகள் கொண்ட ஒரு நரம்புக் கருவியை குணபரன் உருவாக்க முயற்சிக்கிறான். ஆனால் அதில் அவனால் இசைக்க முடியவில்லை. பின் பரிவாதினியின் உதவியினால் அந்த கருவியில் இசைக்கிறான்.

பல்லவச் சக்ரவர்த்தி மகேந்திரவர்மனின் புதல்வன் நரசிம்மவர்மன் அஜந்தா குகைகளில் ஒளிந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து புலிகேசி சிறுபடை ஒன்றை விந்திய மலைக்கு அனுப்புகிறான். குணபரன் தான் இளவரசன் என்பதை அவனது ஓலைச்சுவடிகளிலிருந்து கண்டுகொண்ட பரிவாதினி அவன் தப்புவிக்க உதவுகிறாள். அவளையும் தன்னுடன் வருமாறு வேண்டுகிறான் குணபரன். தன் தந்தையை விட்டு வரமுடியாது என்று தவிர்த்துவிடுகிறாள் பரிவாதினி. அவளுக்காக தான் காத்திருப்பேன் என்றும், வர்ணக்கலவையின் இரகசியத்தை எப்படியாவது கொண்டுவருவதே தாய்நாட்டுக்கு அவள் செய்யும் கடமை என்றும் கூறி குணபரன் செல்கிறான்.

குணபரனை பிரிந்த பரிவாதினி, வர்ணக்கலவையின் ரகசியங்களை அறிந்தாளா? அந்த இரகசியம் எப்படி நரசிம்ம பல்லவருக்கு கிடைத்தது? பரிவாதினியும் நரசிம்மரும் இணைந்தனரா? அவர் புதிதாய் உருவாக்கிய நரம்பு வாத்தியம் பரிவாதினி என்று ஏன் பெயர் பெற்றது? ஆகிய கேள்விகளுக்கு எல்லாம் விடைதான் பரிவாதினியின் கதை.

பரிவாதினி
கலைமாமணி விக்கிரமன் – பரிவாதினி

ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் ஆலயா, சென்னை
ஆண்டு 2010 (முதல் பதிப்பு)
பக்கங்கள் 96
விலை ரூ.40

Advertisements

4 thoughts on “பரிவாதினி

  1. எளிமையான வார்த்தைகளில்
    அருமையான விமர்சனம் நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s