ஊமையன் கோட்டை

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் மன்னரான வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாரில் தூக்கிலிடப்பட்ட பின், அவரது தம்பியான ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் காவல் வைக்கப்படுகிறார். பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரையை வெளியே மீட்டுவருவதற்காக இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் கதையின் களம். கட்டபொம்மன் மறைந்து சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கதை நடைபெறுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு தன் தங்கை கண்ணாத்தாளை கடத்தியவனை கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தேடி அலைகிறான் வீரத்தேவன், பல இளைஞர்களை ஒட்டநத்தம் கிராமத்தில் சந்தித்து ஊமைத்துரையை மீட்க சிறையுடைப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்து அதற்கான நாளும் குறிக்கிறான்.  அனைவரும் மாறுவேடங்களோடு பாளையங்கோட்டை சந்தையில் கூடுவது என்றும் சிறையை உடைப்பது என்றும் திட்டமிடப்படுகிறது.

போராட்டத்திற்காக வரும் இளைஞர்களுக்கு உணவளிக்க பொருள் வேண்டி பல இடங்களில் முயற்சிக்கும் வீரத்தேவன், மருதரசரை காண சிவகங்கை சீமைக்குச் செல்கிறான். அங்கு விடுதி நடத்தும் பூரி ராமசாமித்தேவரையும் அவர் மகள் அஞ்சுகத்தையும் சந்திக்கின்றான். பெரிய மருது பாண்டியர் அவனுக்கு உதவ முடியாத நிலையை கூறி அணுப்பிவிடுகிறார். மனம் நொந்தபடி பாளையங்கோட்டை திரும்பிய வீரத்தேவன் திட்டமிட்டபடியே சிறையுடைப்புக்காக பலபேர் மாறு வேடங்களில் வந்திருந்தனர். அவர்களுள் ஒருவனாக சின்ன மருதுபாண்டியரும் வந்து சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்கின்றனர்.

சிறையிலிருந்து வந்த ஊமைத்துரை பல ஆயிரம் வீரர்களோடு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி செல்கிறார். சென்ன கேசவ நாயக்கர் என்பவரின் வீட்டிலிருந்து கண்ணாத்தாள் மீட்கப்படுகிறாள். திருமணமான கண்ணாத்தாள் தன் கணவன் யார் என்பதை வீரத்தேவனிடம் சொல்ல மறுக்கிறாள். ஊமைத்துரை சிங்கத்தேவன், வீரத்தேவன் ஆகியோரின் உதவியோடு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மறுபடியும் கட்டுகிறார். அவருக்கு உதவுவதற்காக சின்ன மருதுபாண்டியர் பாஞ்சாலங்குறிச்சி வருகிறார். கண்ணாத்தாள், தன் கணவனை கொள்வதில்லை என ஊமைத்துரை, சின்ன மருது பாண்டியர் முன்னிலையில் தன் அண்ணனிடம் வாக்குறிதி பெறுகிறாள். அவள் தன் கணவனை வெளியிடும் வேளையிலே, தங்கள் திட்டத்தை தன் கணவன் வெள்ளையருக்கு காட்டிகொடுத்துவிட்டான் என்பதை அறிந்து அவனை பீரங்கியில் வைத்து கொன்று விட்டு, அவனுடலை சிவகங்கைக்கு எடுத்துச்சென்று அவனுடன் தானும் உடன்கட்டை ஏறுகிறாள். சில தினங்களில் ஊமையன் கோட்டை மீண்டும் வெள்ளையர் வசமாகிறது.

இந்த நாடு எதிரிகளாலே தோற்றது இல்லை
துரோகிகளால் தான் தோற்றது என்று வரலாறு தொடர்ந்து வருகிறதே?

10016

ஆசிரியர்  கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம், சென்னை
ஆண்டு 2012 (முதல் பதிப்பு)
விலை 70

Advertisements

4 thoughts on “ஊமையன் கோட்டை

  1. ஊமையன் கோட்டையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசையை துண்டியமைக்கு நன்றிகள்.

    Like

  2. வருத்தம் என்னவென்றால் சுதந்திரத்திற்கு பிறகும் நாம் துரோகிகளால் இன்னும் தோற்றுக்கொண்டு வருவதுதான்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s