குன்றிமணி

தமிழகத்தின் தலைசிறந்த குலங்களான சோழ, சேர, பாண்டியர் வலுவிழந்த வேளையிலே விஜயநகர பேரரசின் கீழ் தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். மதுரையிலிருந்து திருமலை நாயக்கர் ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழகக் கோயில்கள் பலவற்றிற்கு விண்ணுயர கோபுரங்கள் கட்டப்பட்ட காலம். அந்த காலப்பின்னணியில் சுசீந்திரம் கோயிலில் சுற்றுச்சுவரும் மண்டபமும் கட்டப்பட்டது தொடர்பான கதைதான் குன்றிமணி.

கோயில் மண்டபத்தில், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மூவரின் தலையை யானை இடருவது போல அமைந்துள்ள ஒரு சிற்பம்தான் இந்தக் கதையின் கரு.

வடக்கிலிருந்து வரும் துருக்கர்கள் மதுரையைத் தாக்கும் சூழல் எழுமானால் அதனை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஒரு பாதுகாப்பான கோட்டை தேவைப்பட்டதை உணர்ந்தார் மதுரையிலிருந்த திருமலை நாயக்கர்.  அதற்காக  சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலின் சுற்றுச்சுவரை பெரிய மதிலாக்கவும் அங்கே ஒரு பெரிய மண்டபம் அமைக்கவும் பெருமளவு செல்வத்தை தன் மைத்துனரும், தளபதியுமான ஜெயந்தியப்ப நாயக்கரிடம் தந்து சோழ நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு திருப்பணி நடத்துமாறு பணிக்கிறார். என்றும் தன் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட மன்னர், அந்த கோயில் மண்டபத்தில் தன் சிற்பத்தை செதுக்கவும் வேண்டுகிறார்.

கோயில் திருப்பணிக்காக, சோழ நாட்டிலிருந்து சரபன், சடையர், சதாசிவன் ஆகிய சிற்பிகள் சுசீநதிரம் வருகின்றனர். மன்னரின் சிலையை வடிப்பதற்காக கொளஞ்சி என்ற சித்திரக்காரன், மன்னரை பல கோணங்களில் ஓவியம் வரைந்து வருகிறான். கோயில் வேலை நல்ல முறையில் நடைபெறுகிறது. முதற்கட்ட வேலைகள் முடிந்தவுடன் சடையரும், கொளஞ்சியும் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

திருமலைநாயக்கர் சிலை, மிகவும் அழகாக அமைந்துள்ளதை கண்ட ஜெயந்தியப்ப நாயக்கருக்கு தன் சிலையையும் அங்கு அமைக்கும் எண்ணம் உண்டாகிறது. சதாசிவத்திடம் சிற்பம் செதுக்கும் போது உண்டாகும் மண்ணின் அளவுக்கு ஏற்ப பொன் தரப்படும் என்று கூறிச் செல்கிறார். பெண்ணாசையினாலும் பொன்னாசையினாலும் சதாசிவன் தளபதியை ஏமாற்றுகிறான். இதையறிந்த தளபதி அவனையும் அவனது இரண்டு உதவியாளரையும் சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிடுகிறார்.

2star

ஆசிரியர் பாலகுமாரன்
பதிப்பகம் திருமகள் நிலையம் , சென்னை
ஆண்டு 2010 இரண்டாம் பதிப்பு
பக்கங்கள் 240
விலை ரூ.90

Advertisements

9 thoughts on “குன்றிமணி

 1. When Rajaraja’s 1000th year of coronation was celebrated by the Govt. my book was released my minister V.R.Neduncheliyan. Title-Thanjaiyilae Gangai.. publisher ..Star publisher. This was prescribed as a text book in Bharathidasan univ. and 3 revised editions have been sold out. Balakumaran is a very good personality in tamil cinema. He has written about Gangai kondachokapuram 4 vols. He says that he does not the history of |Rajendra. He has written only a novel.. I publishe in facebook in my site that the year of accession of rajendra was 1012 and not 1014. He has published 4 vols. in 6 or 7 revised editions. As u have entered newly in this field, u first know about persons who r real and who are farce. Dont support fake writers.This is my advise. i have 50 years of univ. lib. service and still conduct Tamil research i.t. center. be careful to write about controversial authors. good luck Prof.Dr.T.Padmanaban 13 sep2015

  Like

  • நன்றி ஐயா. தங்களைப் பற்றிய அறிந்ததில் பெருமகிழ்ச்சி. தங்கள் புத்தகத்தை படிக்கும் ஆவல் வந்துவிட்டது. தங்கள் அறிவுரையை பின்பற்ற முயற்சிக்கிறேன்.

   Like

 2. முனைவர் த.பத்மநாபன் சிறந்த நுலகர்.அவர் போன்ற அறிஞர்களின் வழிகாட்டுதலைப் பெற்று சிறந்த பதிவுக says:

  முனைவர் த.பத்மநாபன் சிறந்த நுலகர்.அவர் போன்ற அறிஞர்களின் வழிகாட்டுதலைப் பெற்று சிறந்த பதிவுகளை மேற்கொள்ள வாழ்த்துகிறேன். அ.கலைமணி

  Like

  • நன்றி ஐயா. தங்களை போன்ற அறிஞர்களின் வழிகாட்டுதல் என்னை இன்னும் ஊக்கப்படுத்தும்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s