கலிங்கராணி

“வேங்கையைக் கண்டால் பயமிருக்காதோ?”
“வேலிருக்கும்போது”
“சிறுத்தை சீறுமாமே?”
“ஆமாம்;சிரித்துக்கொண்டே அதைத் துரத்திப் பிடிப்பேன்”

இவ்வாறு தலைவன் வீரமணிக்கும் தலைவி நடனராணிக்கும் இடையே நடக்கும் காதல்
உரையாடலில் தொடங்குகிறது, பேரறிஞர் அண்ணாவின் கலிங்கராணி.

வாள் முனையைவிட பேனாவின் முறை சக்தி வாய்ந்தது என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு, அந்த பேனா எனும் கத்தியை நன்கு உபயோகித்து தன் ஆரிய எதிர்ப்புக் கொள்கைகளை இந்த நூல் மூலம் வாசகர் நெஞ்சில் ஆழப்பதிக்கிறார் அண்ணா. ஆரியர் திராவிடர் கலப்பு எந்த ஒரு போரோ, பேரழிவோ இல்லாமல் நடந்தது எப்போதுமே வரலாற்றில் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த கேள்விகளுக்கு கலிங்கராணி சில விடைகளை கோடிட்டு காட்டுகிறது.

சோழப் பேரரசரான குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்த நவீனத்தில், குலோத்துங்கச் சோழரை தவிர மற்ற அனைவருமே கற்பனைப் பாத்திரங்கள் தான். சோழ நாட்டு படைவீரனான வீரமணி, மன்னன் மகளான அம்மங்கையின் தோழி நடனராணி, நடனராணியை பழிதீர்க்க துடிக்கும் மற்றோர் சேடியான ஆரியப் பெண் கங்கா பாலா, படைத்தலைவனான தொண்டைமான், நடனராணியின் வளர்ப்புத்தாயான பதுமா, பெயரிடப்படாத பாண்டிய மன்னன், கற்பனை நாடான மலர்புரியின் அரசி மருதவல்லி, மலர்புரியின் படைத்தலைவன் கரிமுகன் என்று பல கதாபாத்திரங்கள் கதையில் வலம் வருகின்றனர்.

ஆரியன் என்னும் எதிரியை தனிமனிதனாக அல்லாமல், ஆரியத்தின் முழுஉருவமாக எந்த ஒரு பெயரும் இல்லாத கதாப்பாத்திரமாக வடித்துள்ளார் அண்ணா.

கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், கோசலர், கங்கர், கராளர், கடம்பர், குறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் என பல அரசுகளை அடங்கிய சாம்ராஜ்யத்தை ஆள்கிறார் குலோத்துங்கர். கலிங்க அரசனான அனந்தவர்மன் மட்டும் திறை செலுத்த மறுக்கிறான். அவனது மந்திரியான எங்கராயன் கூறிய நல்லுரைகளை ஏற்க மறுக்கிறான் கலிங்க அரசன். போர் மூளுகிறது. குதிரைப்படை தலைவனாக வீரமணி நியமிக்கப்படுகிறான். கலிங்கம் போரில் தோல்வியடைகிறது.

போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்த ஒரு கலிங்க வீரன் அவனுடைய மகளைப் பற்றிய சில ரகசியங்களை வீரமணியிடம் கூறி, அவளைக் கண்டுபிடித்து அவளுக்கு பொற்குவியலைத் தருமாறும், அவளுக்கு மணமாகவில்லையெனில் அவளை மணக்குமாறு உறுதிபெற்று உயிர்விடுகிறான். தானளித்த உறுதியைக் காக்க முற்படும் வீரமணி துரோகி என குற்றம்சாட்டப்பெற்று நாடுகடத்தப்படுகிறான்.

ஆரியமாயையில் சிக்கிய மலர்புரி அரசி, ஆரிய முனி ஆட்டிவைக்கும்படி ஆடுகிறாள். அந்த நாட்டுக்கு மாறுவேடத்தில் மணிவீரன் என்ற பெயரோடு செல்லும் வீரமணி, ஆரியமுனியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறான். ஆரியமுனியின் ஆணைப்படி தேவி சேனை என்ற படைக்கு பயிற்சி அளித்து தலைமை தாங்குகிறான். ஆரியமுனியோ, தேவி சேனையைக் கொண்டே மலர்புரியைக் கைப்பற்ற திட்டமிடுகிறான். இந்த சதியிலிருந்து வீரமணி எப்படி மலர்புரியையும் அரசியையும் காத்து, கலிங்க வீரனின் மகளைக் கண்டுபிடித்து, கலிங்கராணியின் கணவனாகிறான் என்பது தான் கதை.

kaling

ஆசிரியர் பேரறிஞர் அண்ணா
பதிப்பகம் பூம்புகார் பதிப்பகம்
பக்கங்கள் 279
பதிப்பு நான்காம் பதிப்பு (2010)
விலை ரூ.60

Advertisements

3 thoughts on “கலிங்கராணி

 1. இதுவரை படிக்கவில்லை. விமர்சனத்தைப் படித்ததும், படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது.

  Like

 2. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பது
  உண்மை என்று இப்பொழுதுதான் புரிகிறது நண்பரே
  தங்களை வலைப் பூவில் சந்தித்தது பெரு மகிழ்வு
  அளிக்கின்றது. இனி தொடர்வேன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s