யவன ராணி

yavanrani

சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு நடந்த சோழப் பெருவேந்தன் கரிகாலனின் கதையை அழகாய், வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்களுடனும் தனக்கே உரிய நடையில் சாண்டில்யன் வடித்திருக்கிறார். இந்த வரலாற்றுப் புதினம் தொடராக குமுதம் இதழில் சுமார் இரண்டரை ஆண்டுகள் 1960களில் வெளிவந்தது.

தமிழகத்தின் வரலாற்றில் இடம் பெற்ற பெரும்  போர்களில் முதன்மையான வெண்ணிப் போரும் அதைப்பற்றிய பட்டினப்பாலை மற்றும் பொருநராற்றுப்படை பாடல்களும் இந்தக் கதையின் கருவாகும்.

சோழ நாட்டின் பேரரசனான இளஞ்சேட்சென்னியின் மாளிகை, இருங்கோவேள் எனும் பாதகனால் எரியூட்டப்படுகிறது. அதில் மன்னனும் அரசியும் மடிகின்றனர். அதில் தப்பித்த இளவரசன் திருமாவளவன் தலைமறைவாகிறான். தலைமறைவான இளவரசன், கரிகாலன் என்னும் காரணப்பெயர் பெறுவதும், இருங்கோவேள், சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டியன் மற்றும் 15 வேளிர்களின் கூட்டுப்படையை வீழ்த்துவதும் வரலாறு.

விலங்கு பகையல்லாது கலங்குபகையற்றதும்
மாற்றார் புகமுடியாதுமான புகார்

என்று பெரிதும் புகழப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் என்ற சோழரின் துறைமுக நகரம் கதைக்களம். புகாருக்கு அருகே உள்ள வாணகரை படைத்தளத்தின் தலைவனான இளஞ்செழியன் கதைநாயகன். யவன நாட்டிலிருந்து டைபீரியஸ் எனும் கடற்படைத்தலைவனுடன் ஒரு ராணி தமிழகத்தில் யவன நாட்டை நிர்ணயிக்கும் முயற்சியில் புகார் வருகின்றனர். அவளை கடற்கரையில் படைத்தலைவன் கண்டதுமுதல் நடக்கும் நிகழ்ச்சிகள் கதை. சற்றும் சளைக்காமல் விறுவிறுப்புடன் கதையை விவரித்துள்ளார் ஆசிரியர்.

படைத்தலைவனின் மாமன் மகள் பூவழகி, யவன ராணி, நாங்கூர்வேள் மகள் அல்லி, அலீமா என்று கதை முழுக்க வரும் பெண்கள் கதையின் போக்கில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல் நம் நெஞ்சங்களிலும் நன்கு பதிந்துவிடுகின்றனர். அழகின் சிகரமாக திகழும் யவன ராணி முடிவில் தியாக சிகரமாகி, பிறப்பால் இல்லாவிட்டாலும்கூட தானும் ஒரு தமிழ்மகள் தான் என்று நிரூபிக்கிறாள்.

பிருமானந்தர், சமண அடிகள், இருந்தலைப்பிடையார், ஹிப்பாலாஸ் என்று அனைத்து கதைமாந்தரும் தேசபக்தியின் உச்சமாக விளங்குகின்றனர். கடல் பயணம், நிலப் பயணம், இந்திர விழா, தேர்ப்போட்டி, வெண்ணிப் போர் என அனைத்து நிகழ்ச்சிகளையும் நம் அகத்தில் பதிய வைக்கிறார் ஆசிரியர். வரலாற்று நிகழ்வுகளையும், இடங்களையும் குறிப்பிடுகையில் உரிய அடிக்குறிப்புகள் தந்து,  வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் படிப்பதற்காக மூல நூல்களின் தொகுப்பையும் நூலில் இணைத்துள்ளார்.

வெண்ணிப் போர் நடந்த முறை பற்றி பட்டினப்பாலை பாடல்கள் பின்வருமாறு கூறுகின்றன.

தலைதவச் சென்று தண்பனை யெடுப்பி
வெண்பூக் கரும்பொரு செந்நெல் நீடி
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை
பொழுங்காற் புதவமொடு செருநதி நீடிச்
செருவும் வாவியும் மயங்கி நீரற்று… (239-244)

வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல்கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி,
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோ வேள் மருங்கு சாய… (276-282)

எதிரிகள் அரண்களை நோக்கிச் சென்று மருத நிலத்திலுள்ள குடிகளைக் ஓட்டி விட்டு, கரும்பு தோட்டங்களையும் பயிர்களையும் அழித்து, ஏரி குளம் குட்டை முதலிய நீர் நிலைகளை தூர்த்து பின்பு படையெடுக்கிறான் என்பதே இதன் பொருள்.

இருங்கோவேளுடன் இருந்த வட நாட்டு வீரர்களையும், குடதிசை (மேல்திசை) கோமகனான சேரனையும், தென்னவனான பாண்டியனையும் சமர் புரிந்து தோற்கடித்து, இருங்கோவேளை கொன்று வெண்ணிப்போரை முடிக்கின்றான்.

ஆசிரியர் சாண்டில்யன்
பதிப்பகம் வானதி பதிப்பகம்
பாகங்கள் 2
விலை 480 (280+230)
பதிப்பு 42 – நவம்பர் 2013 (முதற்பதிப்பு 1963)

Advertisements

3 thoughts on “யவன ராணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s