வலி

சமர்ப்பணம்: கார்ப்பரேட் பரதேசிகளுக்கு

நேற்று காலை 6:00

ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு சுப்ரபாதமும் பில்டர் காப்பியின் மணமும் அவனை எழுப்பியது. ஏனோ எழுந்திரிக்கும் போதே மனமும் உடலும் சரியில்லாதது போல உணர்ந்தான். வயிற்றை பிரட்டியது. இனம் புரியாத கவலை. படித்த படிப்பிற்கு, சேர்ந்த வேலைக்கு, பிறந்ததற்கு என அனைத்திற்கும் தன்னைத் தானே நொந்து கொண்டான்.

இன்று அலுவலகத்துக்கு கட் அடித்துவிட்டு நாள் பூரா தூங்க வேண்டும் போல் இருந்தது. அவன் தொடர்ந்து எட்டு மணி நேரம் தூங்கி கிட்டத்திட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பல பிரச்சனைகள், பல காரணங்கள், பல கவலைகள். அனைத்திற்கும் முதல் காரணம் அவன் வேலை. அதுவும் விரும்பி ஏற்ற வேலை, நல்ல சம்பளம், அனைத்திற்கும் மேலாக பிராண்ட் நேம் என்று சொல்வார்களே, அப்படி நல்ல பெயர் பெற்ற நிறுவனத்தில் வேலை.

இவ்வளவு கிடைத்தும் அவன் நொந்து கொண்டதற்கு காரணம், அவன் வேலை செய்த பிராஜக்ட், அதுவும் கூட அவனாக தேடிக்கொண்ட விபரீதம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த பாழாய்போன பிராஜக்டில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்கியதில்லை. வேலை.. வேலை… வேலை… 12 முதல் 14 மணி நேர வேலை. ஆற்றை கடக்க மண் குதிரை செய்த கதைதான் அவன் செய்யும் வேலையும் என்பதை அறிய ஒரு வருட காலம் ஆனது. ஆனால் அந்த வேலையை கூட அவன் விரும்பி செய்த காலங்களும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இன்னும் இதில் தொடர்ந்தால் வாழ்க்கையே சூனியம் ஆகிவிடும் என்று உணர்ந்தான். இன்று எப்படியாவது வேலையை விடுவது பற்றி பேச வேண்டும் என்று முடிவோடு படுக்கையைவிட்டு எழுந்து அலுவலகத்திற்கு தயாரானான்.

வழக்கமாக பத்து மணி ஆபிசுக்கு எட்டு மணிக்கு செல்பவன், இன்று பத்து மணிக்கு தாமதமாக (நேரத்துக்கு) சென்றான். ஆபீசில் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.

என்ன என்று கேட்டதற்கு, “இன்னும் ரெண்டு நாள்ள யாருக்கோ டெமோவாம். வழக்கம்போல இப்போதான் புதுசா ஏதாவது பண்றத பத்தி யோசிக்க போராங்க”, என்று சொல்லி சிரித்தாள் நந்தினி.

அவன் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்த, சில நொடிகளில் அவன் மேனேஜரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. இப்போதே இந்த பிராஜக்டை விட்டு போவது பற்றி பேச வேண்டும் என்று தைரியம் முழுவதும் வர வைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

“என்ன மிஸ்டர். சுவாமிநாதன், இன்னிக்கு ஏன் லேட்டு?” என்று கேட்டுவிட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல் மேலே போகலானார்.

“இன்னும் ரெண்டு நாள்ள நம்ம கிளையென்ட் அமெரிக்காவிலேர்ந்து வராங்கனு மதன் சொன்னாரு. அவங்களுக்கு காண்பிக்க ஒரு ஒர்க்கிங் ப்ரோடோடைப் செய்யணும். அவ்வளவுதான். நீங்க என்ன வேண்ணா செஞ்சுக்கோங்க, ஐ ஜஸ்ட் வான்ட் திஸ் அவுட்புட் பை டுமாரோ மார்னிங்”, என்று சில காகிதங்களை அவனிடம் நீட்டினார்.

“வருண்! டெமோ முடிஞ்ச அப்புறம் இதை என்ன பண்றது?”

“என்ன சுவாமி, ஏதோ இன்னிக்குதான் பிராஜெக்ட்ல சேந்த மாதிரி கேக்கரீங்க வழக்கம் போல கண்ட்ரோல்  + ஷிப்ட் + டெலிட்  பண்ணிட்டு புதுசா எவனாவது வருவான் அவனுக்கு ஏதாவது புதுசா காண்பிக்கனும். அவ்வளவுதான்.”,  என்று சொல்லி சிரித்தார். “பட் வருண், நான் இந்த பிராஜெட்ல இருந்து ரிலீஸ் பத்தி பேசதான் வந்தேன். எனக்கு சுத்தமா இங்க வேலை செய்ய பிடிக்கல. . . . “, என்று ஆரம்பித்தவனை தடுத்து,

“லுக் சுவாமி. இங்க எல்லாரும் பிடிச்சா வேலை செய்யராங்க. எல்லாரும் என்ன நினைக்கறாங்களோ அதே தான் நானும் நினைக்கிறேன். திஸ் ஹேஸ் டு எண்ட் சம்வேர். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க. அதுமட்டுமில்லாம, இந்த அப்ரைசல்ல உங்களுக்காக நான் நிறைய பிளான்லாம் வச்சுருக்கேன். அதை நீங்களே கெடுத்துக்காதீங்க. நௌ ஜஸ்ட் கான்சென்ட்ரேட் ஆன் தி டெமோ” என்றார் வருண்.

அவனும் வழக்கம்போல தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு, வேலையை செய்ய ஆரம்பித்தான். இரவு 11:30 வரை வேலை செய்துவிட்டு ரூமுக்கு திரும்பினான். அவனுக்கு பின் வேலைக்கு சென்ற நண்பர்கள் எல்லாம் திரும்பி வந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அவனும் படுக்கையில் சாய்ந்தான்.

இன்று காலை 11:00

“ஏன் இன்னும் சுவாமிநாதன் வரலை. கால் பண்ணா கூட அட்டென்ட் பண்ண மாட்ரான். வேலையை ஒழுங்கா செஞ்சா மட்டும் போதுமா? அதை அடுத்தவங்க கிட்ட ஒப்படைச்சுட்டு போக வேண்டாமா? யாராவது அவனுக்கு போன் பண்ணி பாருங்க” என்று கத்திக்கொண்டே வருண் சென்றார்.

நந்தினி, “வருண், நான் அவனுக்கு கால் பண்ணேன், அட்டெண்ட் பண்ணல. ஐ திங் தேர் மஸ்ட் பி சம் ப்ராப்ளம். இல்லனா அவன் இந்த மாதிரி இன்பார்ம் பண்ணாம லீவு போடறவன் இல்ல. அவன் வீட்டுக்கு வேணும்னா போன் பண்ணி பாருங்களேன்”, என்றாள்.

இந்த பேச்சு நடக்கும் போது, மதன் சுவாமிநாதன் வீட்டிற்கு போன் செய்தார். அவனுடைய அம்மாதான் பேசினார். சுவாமிநாதனுக்கு அதிகாலை 2 மணிக்கு உடல் நலம் மிகவும் குன்றிப்போய் சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக சொன்னார். மதன், அவன் எழுந்தஉடன் தங்களிடம் பேசுமாறு சொல்லி கால் கட் செய்தார்.

மதியம் 02:00

அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது அறிந்து, வருணுக்கு சுவாமிநாதன் போன் செய்தான்.

“ஹலோ வருண், ஐம் சாரி. இன்று என்னால் ஆபிசுக்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்.”

“நீ செய்த கோடு என்ன ஆச்சு? செக் இன் பண்ணியா? வேற யாராவது அந்த வேலையை கண்டினியூ பண்ண முடியுமா?”, என்றார் வருண்.

“செக் இன் பண்ணல, ஆனா என்னுடைய மெயிலில் இருக்கு. முழுவதும் முடிச்சிட்டேன். உங்களுக்கு அனுப்பறேன்” என்றான்.

பீப்.. . . .  கால் கட் செய்யப்பட்டுவிட்டது.

மெதுவாக வந்து படுக்கையில் படுத்தான். இப்போது வயிறு மட்டுமல்ல, இதயமும் வலித்தது.  தன்னைப் பற்றியும் தன் உடல்நிலை பற்றியும் கவலைபடாத கார்ப்பரேட்டை நினைத்து. . . .

Disclaimer: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல. தங்களை குறிப்பிடுவதாக யாரேனும் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பாளியள்ளன்.

Advertisements

One thought on “வலி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s