காதலன்: உன்னை பத்தி நான் தான் நல்லா புரிஞ்சுவச்சுருக்கேன்!

காதலி: இல்ல நான் தான் உன்ன பத்தி நல்லா புரிஞ்சுவச்சுருக்கேன்!

(இப்படி செல்லச் சண்டை நடந்து கொண்டிருந்தது, முடிவில்

அவர்களின் கைபேசி பேசியது, “உங்கள பத்தியும் உங்க லவ் பத்தியும் எனக்குதான்டா எல்லாம் தெரியும்!!”)

 

 

 

என் ஓராண்டின் உழைப்பு

மறைந்தது – ஒரு இரவில்,

நிலவோடு போட்டி போட்டுக்கொண்டு

விண்ணை ஒளியூட்டி விட்டு !

நாளை மறுபடியும்

கைகளை கருப்பாக்கிக் கொள்ளபோகிறேன் -

உங்கள் வாழ்வின் ஒரு நாளை ஒளியூட்டுவதற்காக!!

இப்படிக்கு,

நீங்கள் வெடித்த மத்தாப்புகளின் சிரிப்புக்கு பின் உள்ள கண்ணீரின் சொந்தக்காரன்!